Categories
உலக செய்திகள்

டேய்… “இதெல்லாம் வேண்டாம் டா”… உயிரிழப்பு ரொம்ப இருக்கும்…. அதிகரிக்கும் பதற்றம்…. எச்சரித்த “தலைமை தளபதி”….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அது மிகப்பெரிய உயிர் சேதங்களை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி எச்சரித்துள்ளார்.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்ற கோரிக்கையை அந்நாட்டிற்கு விடுத்துள்ளது.

ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மேல் குறிப்பிட்டுள்ள அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போர் வீரர்களையும், அதிபயங்கர போர் விமானங்களையும் குவித்துள்ளது.

இதனையடுத்து போர் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால் ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா தொடர்ந்து அந்நாட்டிற்கு பல எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் முப்படை தலைமைத் தளபதியான ஜெனரல் மார்க் மில்லி இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தால் பல உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். மேலும் மக்கள் தொகை அதிகமிருக்கும் பகுதியில் போர் சண்டைகள் நடந்தால் அதனால் உயிரிழப்புகள் கூடுதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |