Categories
உலக செய்திகள்

எங்கள் ஒலிம்பிக் போட்டியை கெடுக்கிறார்கள்…. அமெரிக்கா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

சீன அரசு, தங்களின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை கெடுக்க அமெரிக்கா பல வீரர்களுக்கு பணம் கொடுத்து போட்டிக்கு எதிரான செயல்களை செய்ய உத்தரவிட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறது.

பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் அடுத்த மாதம் 4-ஆம் தேதி அன்று ஆரம்பிக்க இருக்கிறது. இதற்காக, சீனா கொரோனாவிற்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்கா தங்களின் போட்டியை கெடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக சீனா குற்றம் சாட்டியிருக்கிறது.

இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது, உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக  தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |