90 கிட்ஸ் தொடங்கி 2K கிட்ஸ் வரை “சில்க்” என்ற பெயரை உச்சரிக்காதவர்களே இல்லை. அந்த அளவிற்கு “சில்க் ஸ்மிதா” ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் திடீரென கடந்த 1996-ஆம் ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் சில்க் ஸ்மிதா இன்றளவும் பேசும் பொருளாக உள்ளார்.
Silk Smitha Singing ❤️ pic.twitter.com/jLBeVMCTj0
— Parisal Krishna (@iParisal) January 28, 2022
இந்த நிலையில் திடீரென டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில்க் ஸ்மிதா பாடும் பாடல் ஒன்று கடந்த சில மணி நேரங்களாக பயங்கர வைரலாகி வருகிறது. அதாவது “சுராங்கனி சுராங்கனி” என்ற அந்த பாடலுக்கு சில்க் மேடையில் நடனமாடிக் கொண்டே பாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது சில்க்கின் நினைவுகளில் மூழ்கியுள்ளனர்.