ஆப்கானிஸ்தானில் மக்கள் வறுமை மற்றும் பொருளாதார சரிவு காரணமாக தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் துயரத்தை போக்க மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உட்பட உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியா ஆப்கானிஸ்தனுக்கு 3 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இதற்கிடையே மத்திய வெளியுறவு அமைச்சகம், தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அந்த மருத்துவ பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.