ஆஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரிய அரசு வரும் 1ம் தேதியிலிருந்து அனைத்து மக்களுக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக்கியிருக்கிறது. எனவே, சுமார் பத்தாயிரம் மக்கள் ஒன்றுகூடி அரசின் அறிவிப்பை எதிர்த்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று சுமார் 25 லட்சம் மக்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று கூறி தடுப்பூசிக்கு எதிராக முழக்கமிட்டனர்.