நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கவில்லை என்றும், அரசியல்வாதியாக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இயக்குனர் செல்வ ராகவன் பீஸ்ட் திரைப்படத்தில் நடிப்பது தொடர்பில் புதிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் தான் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்த தகவல் தவறு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், செல்வராகவன் அத்திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரின் கதாபாத்திரம் இத்திரைப்படத்தில் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.