Categories
மாநில செய்திகள்

திமுக செயலாளர் வெட்டிக் கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

முன்விரோதத்தினால் திமுக பிரமுகர்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகர 38-வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்ற அபே மணி, அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு 11 மணியளவில் பாளையங்கோட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மணி சென்று கொண்டிருந்தார்​​. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் மணியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்நிலையில் மணியின், தாய் பேச்சியம்மாள் நடந்த சம்பவத்தை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அந்த கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் அபே மணியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாஸ்மாக் மதுபான பார் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டு இருக்ககூடும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் பதவிக்கு போட்டியிட முயற்சித்து வந்த நிலையில் அபே மணி கொலை செய்யப்பட்டது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |