பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமா பட்டாசு ஆலை அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் கழிவு பட்டாசுகளை எரிக்கும் பணியில் குபேந்திரன், தேவேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கழிவு பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் காயமடைந்த 2 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டுஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.