தேர்தல் பாதுகாப்பு பணிகளை காவல்துறை சூப்பிரண்டு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் குறித்த பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது அவர் நகராட்சி ஆணையாளரான சதீஷ்குமாரிடம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் எனவும், எத்தனை வார்டு உள்ளது எனவும் கேட்டறிந்துள்ளார். பின்னர் இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் இருக்கின்றதா மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.