Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்”… பாமக தனித்து போட்டி…. வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் பாமக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சென்னையிலுள்ள 200 வார்டுகளுக்கும், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பாமக தனித்து போட்டியிடுவதாக தெரிவித்தார். இத்தேர்தலில் பெண்கள், வழக்கறிஞர்கள், புது முகங்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |