உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி எடுத்துச் சென்ற 1 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தற்போது ஆம்பூரில் பைபாஸ் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் சத்தியமூர்த்தி என்பவர் உரிய ஆவணங்களின்றி 1,00,000 ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாவிடம் ஒப்படைத்துள்ளனர்.