Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி”… ரிலீஸ் எப்பத் தெரியுமா…? வெளியான மாஸ் அப்டேட்…!!!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் “கடைசி விவசாயி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி அவரின் இணைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் மணிகண்டன் “காக்கா முட்டை”, “குற்றமே தண்டனை”, “ஆண்டவன் கட்டளை” முதலான படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தற்போது வெளிவர இருக்கும் திரைப்படம் “கடைசி விவசாயி”. இத்திரைப்படம் விவசாயத்தினை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி வேடத்திலும் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படம் விவசாயத்தின் அவசியத்தை கூறுவதாக உருவாகியுள்ளது என சொல்லப்படுகிறது. இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என விஜய் சேதுபதி அவரின் இணையதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை அறிந்த அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |