காட்டு யானைகளுக்கு பொதுமக்கள் தொந்தரவு அளிக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் வளர்ந்துள்ள பசுந்தீவனங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் வருகிறது.
கடந்த வாரம் கே.என்.ஆர் நகர் பகுதியில் 5 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது. எனவே வாகன ஓட்டிகள் காட்டு யானைகளுக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.