Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (31-01-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

31-01-2022, தை 18, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 02.18 வரை பின்பு அமாவாசை.

 உத்திராடம் நட்சத்திரம் இரவு 09.57 வரை பின்பு திருவோணம்.

 மரணயோகம் இரவு 09.57 வரை பின்பு அமிர்தயோகம்.

 நேத்திரம் – 0.

 ஜீவன் – 0.

 தை அமாவாசை.

 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

 எம கண்டம்- 10.30 – 12.00,

 குளிகன்- மதியம் 01.30-03.00,

 சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் – 31.01.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம்  பெருகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் டென்ஷன் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பிள்ளைகளின் விருப்பங்கள் யாவும் பூர்த்தியாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அ-னுகூலம் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சினையை தவிர்க்கலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

Categories

Tech |