Categories
உலக செய்திகள்

நாங்க தான் ஆட்சி செய்வோம்… மியான்மரில் உள்நாட்டு போர் வருமா?… ஓராண்டு நிறைவு.!!

மியான்மரில் ராணுவ ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் உள்நாட்டுப்போர் வர வாய்ப்பு  இருப்பதாக வல்லுநர்கள் விவரிக்கின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். இந்நாட்டு  ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்து வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர் .

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 1500 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு 8,800 பேர் காணாமல் போயுள்ளனர். மியான்மர் நாட்டின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேங் இந்த ராணுவ ஆட்சியை நியாயப்படுத்தினார்.ஆனால் வல்லரசு நாடான அமெரிக்கா,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அரசு அமைக்க வேண்டும் என்று கடுமையாக கண்டித்து வலியுறுத்தியது.

ஜனநாயக ஆதரவாளர்களுடன் மோதலை அதிகப்படுத்தி அதிகாரத்தை தக்க வைக்க ராணுவம் கடும் அடக்குமுறையை பயன்படுத்தியது .இதனால் இந்நாடு உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருப்பதாக சில வல்லுநர்கள் விவரிக்கின்றனர்.மேலும் இந்நாட்டு ராணுவம், எதிர்ப்பை கட்டுப்படுத்த கிராமங்களை இடித்து தள்ளியதால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

Categories

Tech |