ஜெர்மன் நாட்டில் இருக்கும் Panoptikum என்னும் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவரின் தலை வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது.
ஜெர்மனியில் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவருக்கு முடியின்றி வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஹம்பர்க்கில் இருக்கும் Panoptikum-அருங்காட்சியகத்தின் பங்குதாரர் Susanne Faerber, தெரிவித்திருப்பதாவது, பணம் அதிகம் செலவாகும் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், பார்வையாளர்களுக்கு தெரியக் கூடிய அளவில் தலைமுடி வைக்கப்பட்டிருக்கிறது. இது மெழுகு சிலை தான். உண்மையான மனிதர் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.