காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அரேபாளையம் கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து காட்டு யானைகள் மாதவா என்பவரது வீட்டு மதில் சுவரை தாண்டி சென்று மாட்டு தீவனத்தை தின்றுள்ளது. அதன் பிறகு அப்பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு முன்பு அமைத்திருந்த கழிவுநீர் தொட்டி, தடுப்பு சுவர் போன்றவற்றை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது.
இதனை பார்த்ததும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒலி எழுப்பியும், தீப்பந்தம் காட்டியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் அகழி அமைக்க நடவடிக்கை வேண்டும் என கூறியுள்ளனர்.