Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஐயோ…! மதுபோதையில் குதிச்சிட்டேன்…. சத்தம் போட்ட தொழிலாளி…. விரைந்து செயல்பட்ட வாலிபர்கள்…!!

மது போதையில் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த தொழிலாளியை வாலிபர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் தொழிலாளியான ஜெயராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடி சக்தி நகரின் மையத்தில் ஓடும் பவானி ஆற்று பாலத்தில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் ஜெயராம் தடுப்பு சுவர் மீது ஏறி நின்று ஆற்றுக்குள் குதித்துவிட்டார். இதனையடுத்து ஒரு மரக்கிளையை பிடித்தவாறு என்னை காப்பாற்றுங்கள் என ஜெயராம் சத்தம் போட்டுள்ளார்.

இந்த சத்தத்தை கேட்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 3 வாலிபர்கள் நீந்தி சென்று ஜெயராமை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின் ஜெயராம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றிய 3 வாலிபர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |