கடந்த 8ம் தேதி அன்று பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதனையடுத்து தெற்கு மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்து குணமடைந்தார் என்று அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்..
Categories