Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மாடியோவ்!”…. இவ்ளோ கோடி சம்பளம் வாங்குறாரா?…. தளபதி விஜய் குறித்த பகீர் தகவல்….!!!!!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து மாஸாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது பல்வேறு படங்களிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவருடைய ரசிகர்கள் இவரை “தளபதி” என்று அன்போடு அழைக்கிறார்கள். மேலும் இவருக்கு இந்தியா மட்டுமில்லாமல் சீனா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இவருடைய படங்கள் 80 நாடுகள் மற்றும் ஐந்து கண்டங்களில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது வம்ஷி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் “தளபதி 66” படத்திற்கு நடிகர் விஜய் ரூ.118 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் “பீஸ்ட்” திரைப்படத்திற்கும் ரூ.100 கோடி சம்பளம் பெற்ற இவர் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகராக வலம் வருகிறார். “தளபதி 66” படத்தின் ஓடிடி உரிமையை ஜீ நிறுவனம் ரூ.200 கோடிக்கு வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |