அமெரிக்காவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு நச்சுவாயு பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் மேரிஸ்வில்லே எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹாம்ப்டன் இன் எனும் நட்சத்திர ஹோட்டல்உள்ளது .அந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளம் பகுதியில் இருந்தவர்களுக்கு திடீரென மயக்கம், மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் முதலில் நினைவிழந்து இரண்டு வயது சிறுமி ஒருவர் நீச்சல் குளம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 9 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருந்தவர்கள் கார்பன் மோனாக்சைடு நச்சுவால் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை என மேரிஸ்வில்லே பகுதியின் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரி ஜேரிலே அவர்கள் கூறியுள்ளார்.