Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விரைவில் வரவிருக்கும் தேர்தல்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. அதிகாரிகளின் செயல்….!!

பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக் கம்பங்கள் மற்றும் பேனர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இருக்கும் 490 பேரூராட்சிகள், 31 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடக்கனந்தல் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளதால் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது.

இருப்பினும் முதல் நாள் வேட்புமனு யாரும் தாக்கல் செய்ய வரவில்லை. இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கொடி கம்பங்கள் மற்றும் பேனர்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |