பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் நடிப்பில் வெளிவரவிருக்கும் “கங்குபாய் கத்யாவாடி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஆலியா பட் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் முதலான படங்களில் நடித்து பிரபலமானார். தற்பொழுது இவர் “கங்குபாய் கத்யாவாடி”, “ஆர்ஆர்ஆர்” முதலான படங்களில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் ரிலீஸாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப்படம் 1960-இல் மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் வாழ்ந்து வந்த கங்குபாய் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் ஜனவரி 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கிடையே ஜனவரி 7ஆம் தேதி ராஜமௌவுலி அவர்களுடைய “ஆர்ஆர்ஆர்” திரைப்படம் வெளியாக இருந்தன. இருப்படமும் பெரிய பட்ஜெட் படமாக இருப்பதால் திரையரங்கு கிடைப்பதற்கு சிரமம் ஏற்படலாம் என்பதை எண்ணி ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பிப்ரவரி 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 25ஆம் தேதி “கங்குபாய் கத்யாவாடி” ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.