ஓமனில் கடந்தாண்டை விட 1.04 சதவீதம் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
ஓமனில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 44,81,042 ஆக இருந்துள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான மக்கள் தொகை கடந்த 2020 ம் ஆண்டை விட 1.04 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி நடப்பாண்டிற்கான ஓமன் நாட்டின் மக்கள் தொகை 45,27,466 ஆக உயர்ந்துள்ளது.