ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு முறை பயணமாக வருகை புரிந்த எத்தியோப்பியாவின் பிரதமரை 21 குண்டுகள் முழங்க பட்டத்து இளவரசர் வரவேற்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எத்தியோப்பியாவின் பிரதமரான அபி அகமது அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதனையடுத்து அரண்மனைக்கு சென்ற பிரதமரை பட்டத்து இளவரசரான மேதகு 21 குண்டுகள் முழங்க வரவேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டினுடைய தேசிய கீதங்கள் பாடப்பட்டுள்ளது.
அதன்பின்பு இரு நாடுகளிலும் பலதுறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது உட்பட பல முக்கிய விஷயங்களை பட்டத்து இளவரசரும், எத்தியோப்பியாவின் பிரதமரும் பேசியுள்ளார்கள். இந்த சந்திப்பின் போது பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.