தமிழ்நாடு கனிம நிறுவன கிராபைட் மேம்பாட்டு ஆலையை இயக்குனர் சுவித்ஜெயின் ஆய்வு செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோமாளிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு கனிம நிறுவன கிராபைட் மேம்பாட்டு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் கனிமவளத்துறை நிர்வாக இயக்குனர் சுவித்ஜெயின் கனிமக்கற்கள் வெட்டும் பிரிவு ,கிராபைட் பொடியாக தயாரிக்கப்படும் பிரிவு ,கனிமப்பொருட்கள் சுத்திகரிக்கப்படும் பிரிவு என அனைத்து பிரிவுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கிராபைட் நிறுவன உதவி மேலாளர் ஹென்றி ராபர்ட் உள்ளிட்ட பலர் கலந்துள்ளனர். இதனையடுத்து கனிமவளத்துறை நிர்வாக இயக்குனர் சுவித்ஜெயின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தவும் அரசுக்கு மனு அளிப்பதாக கூறியுள்ளார்.