அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் நகர கழக செயலாளர் வரவேற்புரை ஆற்றியுள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றியுள்ளார்.
அதன்பின் அதிக அளவில் உறுப்பினர் சேர்ப்பது 24 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவது குறித்தும், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை வீடு வீடாக எடுத்துச் சென்று கூறி வாக்குகள் சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.