ஏமன் அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் மாரிப் நகரிலுள்ள ராணுவ வளாகத்தை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டிலுள்ள பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளார்கள். இருப்பினும் அந்நாட்டிலுள்ள மாரிப் நகரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்ற முடியவில்லை.
இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்த நகரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் மாரிப் நகரிலுள்ள ராணுவ வளாகம் ஒன்றை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது