மேற்கு இந்திய தீவுகளில் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது நில அதிர்வு ஏற்பட்டுள்ள, காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அப்போட்டி பதினாறு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்றன. அந்த போட்டி நேற்று அயர்லாந்து மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கான போட்டி டிரினிடாட்டின் குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அந்த சமயத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது அங்கிருந்து போட்டியை நேரில் பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள், வர்ணனையாளர்கள் இருந்த கட்டிடத்தில் சில நிமிடங்களுக்கு உணரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று போர்ட் ஆஃப் கெட் ஸ்பெயின் மைதானத்தில் ரிக்டர் அளவில் 5.2 ஆக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்கள் நில அதிர்வு ஏற்பட்டது கூட தெரியாமல் தனது ஆட்டத்தை நிறுத்தாமல் விளையாடி கொண்டிருந்ததால் ஆட்டம் பாதிக்கப்படவில்லை.