தன்னை கடவுள் அனுப்பியதாக கூறி அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனை கொல்ல சென்ற நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
அமெரிக்காவிலுள்ள கன்சாஸ் மாநிலத்தில் ஸ்காட் மேரிமென் என்ற கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடனை கொல்லும்படி தன்னை கடவுள் அனுப்பியதாக அவரை காண சென்றுள்ளார்.
இந்நிலையில் மேரி மென்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். அந்த விசாரணையில் அமெரிக்கர்களை பிளவுபடுத்தும் கொள்கையினால் அதிபர் ஜோ பைடன் மீது மக்கள் வெறுப்பாகியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் அடிக்கடி சர்ப்பத்தின் தலையை வெட்டினால் மட்டுமே நாடு உருப்படும் என்றும் கூறிக்கொண்டே இருந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அதிபர் ஜோ பைடன் நரகத்திற்கு தான் செல்வார் என்றும் காவல்துறை அதிகாரியிடம் அவர் கூறியுள்ளார்.