Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன்-ஹாரிஸ் ஜெயராஜ்…. புதிய படத்தில் இணைகிறார்கள்…. வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் புதிய படமொன்றில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 2001ஆம் வருடம் வெளியாகிய மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசை அமைத்து முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படத்துக்கு இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு எதிர்பார்த்த திரைப்படம் இதுவாகும்.

இத்திரைப்படத்திற்கு நடிக்கப்போகும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க போவதாக சினிமாத்துறையில் பேசப்படுகின்றன. இவர்கள் இருவரும் இணைவது இதுவே முதல்முறை என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகி உள்ளது.

Categories

Tech |