இயக்குனர் சிவா இசையமைப்பாளரை பாராட்டி அனுப்பிய வாட்ஸப் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிவா இயக்கி நடித்த அண்ணாத்த திரைப்படம் விமர்சகர்களுக்கு திருப்தியாக அமையவில்லை. எனினும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக கூறப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை சிவா இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Ever since #AmmaSong in #Kanam released I've been getting so many messages & this topped it all from the dir of #Annaaththe #Viswasam #SiruthaiSiva Sir who's a master of making soulful melodies in his movies. These words meant a lot to me. Thank you all for accepting #AmmaSong❤️ pic.twitter.com/bxk8qgbpCv
— Jakes Bejoy (@JxBe) January 27, 2022
இந்நிலையில் நடிகை அமலா தமிழில் நடித்திருக்கும் கணம் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இப்பாடலை இசையமைத்த ஜேக்ஸ் பிஜோயை, ஐயக்குனர் சிவா பாராட்டி வாட்ஸப்பில் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார். அதனை இசையமைப்பாளர் ஜேக்ஸ், தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.