பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் நின்று கொண்டிருந்தார். அந்த நபர் திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் மாநகர பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கி தலை நசுங்கி அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.