டீக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள வைக்கம் பெரியார் நகரில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டீக்கடைக்கு முன்பு போடப்பட்டிருந்த கருங்கல் பலகையில் அதே பகுதியில் வசிக்கும் அர்ஜுன், அருண்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் உட்கார்ந்தனர். இதனை பார்த்ததும் இங்கு உட்கார கூடாது என முகமது 3 பேரையும் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற 3 பேரும் அரிவாளை எடுத்து வந்து முகமதை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த முகமதை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து முகமது அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அர்ஜுன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.