சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 2018 ல் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சுமார் 6,70,000 ஆயிரம் பிராங்குகள் மதிப்பிற்கு சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 56 வயதுடைய நபரொருவர் ஜெனிவாவிலுள்ள துப்பாக்கி விற்பனை மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றதையடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த ஸ்விஸ் நாட்டவரை கைது செய்து சோதனை செய்துள்ளார்கள். அப்போது அவரிடம் உரிமம் இல்லாத 77 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே இவர் கடந்த 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் சுமார் 6,70,000 பிராங்குகள் மதிப்பில் சவுதி அரேபியாவில் அரசு குடும்பத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களை விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் மேல் குறிப்பிட்டுள்ள வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு உரிமம் இல்லாத ஆயுதங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.