Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் “மோடிக்கு கோவில்” ….. தினமும் பாலபிஷேகம்… இப்படியும் ஒரு தொண்டனா…!!!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு நடத்துகிறார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இருக்கும் எரகுடி என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயியான சங்கர், சிறுவயதில் இருந்தே பிரதமர் மோடியின் பெரிய ரசிகராக இருந்து வருகிறார். அந்த வகையல் அவர் தன் சொந்த செலவில் பிரதமர் மோடிக்கு கோவில் ஒன்றை கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

இந்நிலையில் துறையூரை அடுத்து உள்ள எரகுடியில் தன்னுடைய  விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவிலை கட்டி சிலை வைத்துள்ளார். மேலும் தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து பூஜை செய்து வருகிறார்.

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி

சங்கர் இதுபற்றி கூறியதாவது:-

பிரதமர் மோடியின் மீது சிறுவயது முதலே கொண்ட அன்பால், எந்தவித எதிர்பார்ப்பும், யாருடைய உதவியும் இன்றி எனது சொந்த செலவில் கோவில் கட்ட விரும்பினேன். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் கோவில் கட்ட முடியவில்லை.

தற்போது, விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு, கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது, கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் ஆவார். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |