பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வங்குடி கிராமத்தில் பெருமாள் ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் செல்வதுரை என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று செல்வதுரை தனது மகனான மகாதேவன் என்பவருடன் ராணியின் வீட்டிற்கு சென்று அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வதுரை மற்றும் மகாதேவன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.