Categories
மாநில செய்திகள்

ரூ120,00,000 ஊழல்…… முன்னாள் முதலமைச்சர்கள் கைவரிசை…… 19 பேர் மீது வழக்கு பதிவு….!!

டெல்லி ஆக்ரா இடையிலான யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைப்பதில் நடந்ததாகக் கூறப்படும் 120 கோடி ரூபாய் ஊழல் குறித்த விசாரணை சிபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு  டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலைகளுக்கான  திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மாயாவதி துவக்கி வைத்தார். பின்னர் அவரது ஆட்சி போய் 2012ஆம் ஆண்டு சமாஜ்வாதி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சாலையை திறந்து வைத்தார்.

165 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை  அமைக்கும் பணியில் 55 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்த தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதன் படி அதிவிரைவு இயக்குனர் மற்றும் திட்டம் தொடர்பான 19 பேர் அரசுக்கு 120 கோடி இழப்பு ஏற்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட கண்டுபிடிக்கப்பட்டு மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

Categories

Tech |