Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு அடுத்த புதிய ஆபத்து?…. “மீண்டும் முழு ஊரடங்கு அமலா?”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. எனவே மக்கள் புதிய வகை வைரஸ் பற்றி பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் கொரோனா மூன்றாவது அலையால் அதிக அளவில் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் குறைய தொடங்கும். எனவே மக்கள் அனைவரும் கொரோனா கட்டுபாடுகளை கடைபிடிப்பது அவசியம்.

காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் தொற்று பாதிப்பு கேரளா எல்லைப் பகுதியில் இன்னும் குறையாமல் இருப்பதால் அங்குள்ள மக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தால் விரைவில் ஊரடங்கு கடுமையாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |