Categories
அரசியல்

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு: “கிரேட் எஸ்கேப் ஆனா தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்….!!”

கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், செயலாளர்கள் வேணுகோபால் மற்றும் சரத்குமார் உட்பட 17 பேர் மீது ஆயிரம் விளக்கு தொகுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வேல்முருகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது சேர்க்கப்பட்ட பிரிவுகளை மாற்றி குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் சரியான முகாந்திரம் இல்லை என நீதிபதி கூறியதை அடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Categories

Tech |