Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டில் தூங்க முடியாது..! இது என்ன பிசினஸா ? போர்க்களம் சார்… சண்டை செய்யணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கொரோனா காலத்திலும் தேர்தல் வைப்பது ஆளுங்கட்சியின் உடைய இயலாமை என்று சொல்கிறேன். சுப்ரீம் கோர்ட்டில் போய் அவர்கள் சொல்ல வேண்டும். ஓமைக்கிறான் பரவல் அதிகமாக இருக்கின்றது,  பிப்ரவரியில் குறையும் என்று மருத்துவ வல்லுநர்கள் எல்லாம் சொல்கிறார்கள். அதனால மார்ச்சில் தேர்தல் வைக்க எங்களை அனுமதிங்கள் என்று சொல்லலாம்.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் 7 கட்டம், 8 கட்டமாக நடத்துகிறார்கள். கொஞ்ச  கொஞ்ச தொகுதியா நடத்துகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 20 நாள் எல்லா இடத்திலுமே நடமாட போறாங்க. எனவே இந்த  தேர்தலை  வைக்கிறது சரியா என்பது தெரியல ? வட மாநிலங்களில்  தேர்தல் நடத்தி தப்பு பண்ணுறாங்க என்பதால் நம்ம ஊரிலும் பண்ணனுமா என்பது என்னுடைய கருத்து.

வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் போட்டியிடுறோம். நிச்சயமாக நாங்க நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு உண்மை தானே. தேர்தல் என்பது  போர்க்களம். அதில் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சி செய்வோம். முறைகேட்டை தடுத்து நிறுத்தி, ஜெயிச்சு வர வேண்டும். இது போர்க்களம் சார்…

தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம் அதில் சண்டை போட்டு தான் வர வேண்டும். அதை விட்டு ஒரு தேர்தலில் தோற்று விட்டால், இரண்டு தேர்தலில் தோற்று விட்டால் வீட்டில் போய் படுத்துக் கொள்ள முடியுமா ? இது பிசினஸா ? பூட்டி விட்டு செல்வதற்கு…. கடைசி மூச்சு வரை போராடுவோம் என்று நான் சொல்லித்தான் இருக்கேன் என தெரிவித்தார்.

Categories

Tech |