கனடாவில் தடுப்பூசியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகியதற்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையே பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகரான ஒட்டாவாவில் மக்கள்,ட்ரக் ஓட்டுனர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ‘Freedom Convoy’ என்ற ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் குடும்பத்தாருடன் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இந்தியாவில் ஓராண்டுக்கும் அதிகமாக நடந்த விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு உரிய பலன் தான் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கிடைத்திருக்கிறது என்று இந்தியாவை சேர்ந்த இணையதளவாசிகள் சிலர் விமர்சிக்கிறார்கள்.
Karma Returns !
Truckers protest in Canada intensifies,Canadian PM @JustinTrudeau & his family left for secret place due to security fears.
He supported tractors on roads of Delhi now facing same in his own country#TruckersForFreedom2022 pic.twitter.com/kiy5owpnKP— Major Surendra Poonia (@MajorPoonia) January 30, 2022
இந்தியாவின் தலைநகரான புது டெல்லியின் எல்லைப்பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்தார். எனினும் தங்கள் நாட்டில் இருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவுடன் பயந்து ஓடி ஒளிந்து கொண்டார் என்று இணையதளங்களில் பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது.