நேற்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் அவருடைய உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்சே வாரிசுகளுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “காந்தியடிகளின் நினைவு நாளான இன்று சகோதரத்துவமும் அன்பும் கொண்டு ஒற்றுமை பேணிட வேண்டும்.
நமது இந்திய மண்ணில் கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களுடைய தீய எண்ணங்களுக்கும் இடமில்லை என்று சூளுரைப்போம்” என பதிவிட்டுள்ளார். அதாவது ஆளும் திமுக தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளுக்கும், ஆளுநரின் கருத்துக்களுக்கும் இடையே நிலவும் தீவிர மோதல் போக்கை சுட்டிக்காட்டும் விதமாக ஆளுநரை வைத்துக்கொண்டே ஸ்டாலின் கோட்சே வாரிசுகளுக்கு இடமில்லை என்று கூறி பாஜகவை நேரடியாக சீண்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.