நடிகர் ரஜினிகாந்த் விவாகரத்து செய்துகொண்ட தன் மகள் ஐஸ்வர்யாவை திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பின்பு இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாகி விட்டனர். இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற இருவரும் ஒரே ஓட்டலில் வேறு வேறு அறைகளில் தங்கியிருக்கிறார்கள்.
விவாகரத்து செய்து கொண்டது தொடர்பில், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் உள்ளாராம். இந்நிலையில், ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் இருந்து கொண்டு தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ரஜினி, ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டியிருக்கிறார். இரண்டு மகன்கள் இருக்கும் போது அவர்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், உன் இஷ்டத்திற்கு விவாகரத்து செய்து விட்டாயே? உன் அம்மாவிற்கும் எனக்கும் தான் பிரச்சனை இருந்திருக்கிறது.
உனக்காகவும், சௌந்தர்யாவிற்காகவும் தான் அமைதியாக இருந்திருக்கிறேன். எனக்கு என் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று நினைத்திருந்தால், எப்போதோ உன் அம்மாவை விட்டு போயிருப்பேன். உன் பிள்ளைகள் மீது சுத்தமாக அக்கறை இல்லை உனக்கு என்று கூறிவிட்டு வைத்து விட்டாராம். இதனைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா, தன் தாய் லதாவிற்கு போன் செய்து கதறி அழுததாக கூறப்பட்டிருக்கிறது.