Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம்..!!

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இச்சட்டம் மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

தமிழ்நாட்டில் பல்வேறுப் பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில் அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரி மற்றும் திமுகவின் மூன்று எம்எல்ஏக்கள், விசிகவின் வன்னியரசு ஆகியோர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Categories

Tech |