ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள Huntingdale என்னும் பகுதியில் வசித்த இலங்கையைச் சேர்ந்த இந்திகா குணத்திலகா என்ற 40 வயது நபர் தன் மகன் மற்றும் மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்தார். எனவே, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குணத்திலகா பற்றி பல தகவல்கள் தெரியவந்திருக்கிறது. இவர் ஆஸ்திரேலியாவிற்கு படிக்க சென்ற நிலையில், தன்னுடன் படித்த அந்நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரின் மனைவி மற்றும் மாமியார் சட்டத்துறை பணியில் இருக்கிறார்கள்.
குணத்திலகாவிற்கு தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதற்கு அவரின் தாய்க்கு மனமில்லை. எனினும் அவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதில் தலையிட்ட மாமியாரை அவரால் சமாளிக்க முடியவில்லை.
மேலும், மனைவி மற்றும் மாமியார் சட்டத்துறையில் பணியாற்றுவதால் அவர்களிடம் வாக்குவாதம் செய்ய முடியாமல் தவித்து வந்திருக்கிறார். இதனை தன் நண்பர்களிடமும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கு ஏற்பாடுகள் நடந்திருக்கிறது.
எனவே, தன் குழந்தைகளோடு குணத்திலகா தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். இது பற்றி அவரின் நண்பர்கள் தெரிவித்ததாவது, அவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளை அதிகமாக நேசித்தார். எனினும் அவரின் மனைவி பிள்ளைகளை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. மாமியாரும் அப்படித்தான் இருந்தார்.
எனவே, அவர் தன் பிள்ளைகளை பார்த்துக்கொண்டிருந்தார். எனினும், மன அழுத்தம் அதிகரித்து வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், அருமையான இரண்டு குழந்தைகளும் நன்றாக வாழக்கூடிய காலத்தில் இவர்களது பிரச்சனையால் இறந்துபோனது தான் வேதனைத் தருகிறது என்று கூறியிருக்கிறார்கள்.