இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்டகாரர்களில் ஒருவரான மேசன் தனது காதலியை உடலுறவுக்காக அடித்து கொடுமை செய்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியான நிலையில் அவரை காவலர்கள் கைது செய்துள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 20 வயதாகும் மேசன் கிரீன்வுட் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கால்பந்தாட்ட வீரராக திகழ்கிறார்.
இவர் தனது காதலியான மாடல் அழகி ஹாரீட் ரோபிசனை உடலுறவுக்காக வாயை உடைத்து, அவரது உடலில் ஆங்காங்கே அடித்து கொடுமை செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த ஹாரீட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கொடுமைகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் மேசன் தன்னுடன் பேசிய மிக மோசமான ஆடியோ ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பதிவு அனைவரிடத்திலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் மேசன் கிரீன் வுட் மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.