பிரேசில் நாட்டில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் பலத்த மழையால் 18 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லா என்னும் நகரில் ஒரு வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு பலத்த மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு 18 நபர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த மாநிலத்தினுடைய கவர்னரான ஜோவ் டோரியா தெரிவித்திருப்பதாவது, பலத்த மழை உண்டாக்கிய பாதிப்புகளை அதிக வேதனையுடன் பார்வையிட்டு கொண்டிருக்கிறேன்.
பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிப்படைந்தவர்களுக்கு தேவையானவற்றை அளிப்பதற்குரிய அதிகாரம் எனக்கு உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.