Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவள் என்னை விட்டு போயிட்டா” காதலன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் எழில் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உறவுக்கார பெண்ணான கல்லூரி மாணவியை எழில் காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் நீண்ட நேரம் செல்போனில் பேசியதை மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து காதலி தற்கொலை செய்து கொண்டதை நினைத்து வருந்திய எழில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எழிலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |