மலையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு தீயணைப்பு வீரர்கள் பிறகு அணைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகில் இருக்கும் முருகன் கோவிலின் பின்புறம் இருக்கும் சிறிய மலையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காய்ந்த புற்கள், சிறிய மரங்கள் போன்றவற்றில் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலையில் பற்றிய தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.